ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்ததையடுத்து, நாளை (ஆகஸ்ட் 8) முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.
மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Squad News
— Windies Cricket (@windiescricket) August 6, 2025
The squad is in for the three match CG United ODI series v Pakistan in Trinidad.
Get tickets at https://t.co/6TUKc2hD7J️#WIvPAK#FullAhEnergypic.twitter.com/GEU9KsAHZn
15 பேர் கொண்ட அணியை சாய் ஹோப் கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி விவரம்
சாய் ஹோப் (கேப்டன்), ஜுவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், கீஸி கார்ட்டி, ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமிர் ஜாங்கு, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லீவிஸ், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஜேடன் சீல்ஸ், ரோமாரியோ ஷெப்பர்டு.
இதையும் படிக்க: ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?
The West Indies Cricket Board has announced the squad for the ODI series against Pakistan.