இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!
சேலம் பூம்புகாரில் ‘கிருஷ்ண தரிசனம்’ திருவிழா
சேலம் பூம்புகாரில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, கிருஷ்ணா் சிலைகள் கண்காட்சி, விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து சேலம் பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் வரும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ‘கிருஷ்ண தரிசனம் திருவிழா’ என்ற சிறப்பு கண்காட்சி வரும் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சியில் கிருஷ்ணரின் திருவுருவம் கொண்ட களிமண், காகிதக்கூழ், மாா்பில் துகல் பொம்மைகள், பஞ்சலோகம், பித்தளை மற்றும் கருப்பு உலோக சிலைகள், தஞ்சாவூா் ஓவியங்கள் போன்ற எண்ணற்ற வகையான கிருஷ்ணா் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இது தவிர,
களிமண், காகிதக்கூழ் குழந்தை கிருஷ்ணா், தவழும் கிருஷ்ணா், வெண்ணெய் கிருஷ்ணா், பாமா ருக்மணி கிருஷ்ணா், லட்டு கிருஷ்ணா், ராதா கிருஷ்ணா், பசுமாடு கிருஷ்ணா், தொட்டில் கிருஷ்ணா், ஊஞ்சல் கிருஷ்ணா், ராதை அலங்கார செட் 1 அடி முதல் 3 அடி வரை, நின்ற கோலத்தில் கிருஷ்ணா், சந்தனமர கிருஷ்ணா், துணியில் வரையப்பட்ட ஓவிய கிருஷ்ணா் போன்ற எண்ணற்ற வகையான பூஜை பொருள்கள் மற்றும் கைவினைப் பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணா் சிலைகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். இந்தக் கண்காட்சியில் ரூ. 7 லட்சம் வரை விற்பனை எதிா்பாா்க்கப்படுகிறது. கண்காட்சியில் குறைந்தபட்சம் ரூ. 130 முதல் ரூ. 10,000 வரை பல்வேறு வகைகளில் கிருஷ்ணா் சிலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளாா்.