`ஆபாச காட்சிகள்' - ஸ்வேதா மேனன் மீது FIR பதிவு; நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவித...
Mundhanai Mudichu: ``பாக்கியராஜ் சார் புடவை அணிந்து எனக்கு நடிக்க சொல்லிக் கொடுப்பார்!'' - ஊர்வசி
நடிகை ஊர்வசிக்கு 'உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இதற்கு முன் 2005-ம் ஆண்டு இவர் நடித்திருந்த 'அச்சுவின்டே அம்மா' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றிருந்தார்.
1983-ம் ஆண்டு வெளியான 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஊர்வசி இன்றும் தொடர்ந்து பல வேடங்களில் நம்மை என்டர்டெயின் செய்து வருகிறார்.
தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டப் பிறகு பேட்டியளித்த ஊர்வசி, "எந்த அடிப்படையில் அல்லது அளவுகோல்களின் அடிப்படையில் சிறந்த துணை நடிகைக்கான விருது, விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்படுகிறது?

விஜயராகவனை சிறந்த துணை நடிகராகவும், ஷாருக்கானை சிறந்த நடிகராகவும் ஆக்கியது எது? சிறந்த நடிகர்கள் இருவர், சிறந்த துணை நடிகர்கள் இருவர்.
ஆனால், சிறந்த நடிகையாக ஒருவரையும், சிறந்த துணை நடிகையாக ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். ஏன் நடிகைகளுக்கான விருது பகிர்ந்தளிக்கப்படவில்லை?" எனப் பேசியிருந்தார்.
தற்போது தொகுப்பாளர் கோபிநாத்தின் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்திருக்கிறார். அதில் 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் நினைவுகளை ஊர்வசி பகிர்ந்திருக்கிறார்.
ஊர்வசி பேசும்போது, "நான் 'முந்தானை முடிச்சு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானபோது, கேமரா இயக்கப்படாதபோது நிம்மதியாக உணர்ந்தேன்.
ஆனால், இயக்குநர் 'ஷாட் ரெடி' என்று சொன்னவுடன், நான் பதற்றமடைவேன்.
பாக்யராஜ் சார் அவர்களின் முயற்சிகளால்தான் என் நடிப்பு நல்ல வடிவத்தைப் பெற்றது. படத்தின் வெற்றிக்காக நான் எந்தவொரு சிறப்பு முயற்சியும் எடுக்கவில்லை.
உண்மையில், படப்பிடிப்பில் யாராவது என்னைத் திட்டினால், நான் அங்கிருந்து வீட்டுக்குப் போய்விடுவேன்.
நான் சரியாகச் சாப்பிடுவதை உறுதி செய்ய ஒரு மேலாளர் கூட நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் ஒரு கைத்தடியுடன் என்னைத் துரத்தி வந்து, எடை அதிகரிக்க சாப்பிட வேண்டும் என்று மிரட்டுவார். 'முந்தானை முடிச்சு' படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளில் நான் பெரிதாக சிரமப்படவில்லை.
ஒருவேளை என் தந்தையின் நாடகக் குழுவின் சூழலில் நான் வளர்ந்ததால் அப்படி இருந்திருக்கலாம். என் தந்தையும் அவரது சக கலைஞர்களும் நடிப்பதை சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்தேன்.
பாக்யராஜ் சார் சில காட்சிகளில் எப்படி நடந்து, நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க, புடவை அணிந்து கூட எனக்கு விளக்கினார். அவரின் வழிகாட்டுதல் இல்லாமல் நான் இன்று இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்," என்று கூறினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...