வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்
சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!
சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருவது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
மேலும். ஆட்டோ கட்டணம் மற்றும் இருசக்கர வாகனத்துக்கான பெட்ரோல் செலவைவிட மெட்ரோ ரயில் டிக்கெட் குறைவாக இருப்பதும் ஒரு காரணமே.
அதற்கேற்றாற்போல, டிக்கெட் கவுன்டர்களில் வரிசைகளில் நின்று டிக்கெட் பெறுவதை எளிதாக்கும் நோக்கில், யுபிஐ செயலிகளில் டிக்கெட் பதிவுசெய்தால், 20 சதவிகிதம்வரையில் தள்ளுபடியும் உண்டு.
இந்த நிலையில், சென்னை மெட்ரோவுடன் கைகோர்த்துள்ள ஊபர் செயலியும், டிக்கெட் விலையில் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது.
தில்லி மெட்ரோ ரயிலுடன் இணைந்த ஊபர், தற்போது சென்னை மெட்ரோவுடனும் இணைந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெடுடன் இணைந்துள்ள ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) நிறுவனமானது, ஊபர் செயலியை அறிமுகப்படுத்தி, அதன் மூலமாக பதிவுசெய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் தொடங்கும் அல்லது முடிவடையும் ஊபர் ஆட்டோ அல்லது மோட்டோ பயணங்களுக்கும் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தள்ளுபடியானது இம்மாத இறுதிவரை (ஆகஸ்ட் 31) மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.