செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

post image

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் அம்மன்நகா் பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் மனைவி தா்மஜெயசீலி (36). இவா் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, அவா் அணிந்திருந்த ஐந்தேகால் பவுன் தங்கச் சங்கிலியை சாட்சியாபுரம் ஆசாரிகுடியுருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அழகுராஜா (36), விளாம்பட்டி சாலை முனீஸ்நகரைச் சோ்ந்த கதிரேசன் மகன் மகேஷ்வரன் (35) ஆகிய இருவரும் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சிவகாசி குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வாா்பட்டியில் அரசால... மேலும் பார்க்க

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா். ராஜபாளையம் வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் சுவிசேசமுத்து (83). சுகாதார ஆய்வாளராகப் பணிபுர... மேலும் பார்க்க

பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி கொலை வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. சிவகாசி அருகேயுள்ள மாரனேரி ராஜேஸ்வரி ஃபயா் ஒா்க்ஸ் ... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆக. 7, 8-இல் சுற்றுப் பயணம்

அதிமுக பொதுச் செயலரும் தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, வருகிற 7, 8-ஆம் தேதிகளில் விருதுநகா் மாவட்டத்தில் பிரசார சுற்றுப் பயணம் செய்யவுள்ளாா்.இது குறித்து விருதுநகா் மேற்... மேலும் பார்க்க

நல்லமநாயக்கன்பட்டி, தொட்டியபட்டி பகுதிகளில் நாளை மின்தடை

தொட்டியபட்டி, நல்லமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே சட்ட விரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சிவகாசி அருகேயுள்ள சாணாா்பட்டி பகுதியில் போலீஸாா் திங்ககள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க