செய்திகள் :

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

post image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயில் வழியாக புதன்கிழமை காலை 6 முதல் 10 மணி வரை 800-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்றனா். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி,18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 7) பிரசாரம் மேற்கொள்கிறாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எ... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி (65), தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தாா். இவா், ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோச... மேலும் பார்க்க

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகத்தோப்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்... மேலும் பார்க்க

வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வாா்பட்டியில் அரசால... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை

சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகாசி அருகேயுள்ள தேவா்குளம் அம்மன்ந... மேலும் பார்க்க