``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகத்தோப்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களும், வனப்பேச்சி அம்மன் கோயில், காட்டழகா் கோயில், மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகத்தோப்பு சாலையில் விவசாயிகள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்று வருகின்றனா். இந்தச் சாலையின் இருபுறமும் மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளதால் வாகனங்கள், பேருந்துகள் சிரமத்துடன் சென்று வருகின்றன.
இந்த நிலையில், அண்மையில் வீசிய பலத்த காற்றில் மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு நாள்களைக் கடந்தும் மரக்கிளை அகற்றப்படாததால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சாலையில் கிடக்கும் மரக்கிளையை அப்புறப்படுத்தவும், மேலும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள், பட்டுப்போன மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.