வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்
டிகிரி தேவையில்லை, மாதம் 2 லட்சம் சம்பளம் - ஏ.ஐ நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் - எப்படி விண்ணப்பிப்பது?
புச் ஏஐ (Puch AI) நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான சித்தார்த் பாட்டியா, எக்ஸ் தளத்தில் ஒரு தனித்துவமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பை அறிவித்துள்ளார்.
அதன்படி பட்டப்படிப்பு தேவையில்லாத உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் விண்ணப்பிக்கக்கூடிய ஒரு இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த இன்டர்ன்ஷிப் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு ஏஐ பொறியாளர் (AI Engineer) மற்றும் "குரோத் மேஜிஷியன்" (Growth Magician) ஆகிய பணியிடங்களுக்காக வழங்கப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்ப செயல்முறை முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சித்தார்த் பாட்டியாவின் லிங்க்ட்இன் பதிவில் நேரடியாக கருத்து (Comment) தெரிவித்து, தங்கள் திறமைகளையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பதிவில், " ஏன் உங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், புச் ஏஐ-யில் எதைப் பணியாற்ற ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை கருத்தில் தெரிவிக்கவும் (தயவுசெய்து தனிப்பட்ட தகவல்களை அனுப்ப வேண்டாம்)" என்று பாட்டியா குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு 500-க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்று வைரலாகி வருகிறது.
We're Hiring!
— Siddharth Bhatia (@siddharthb_) August 6, 2025
Join @puch_ai to build AI for a Billion+ people.
Stipend: ₹1L–2L/month
️ Start: Whenever you're ready
Remote
PPOs for top performers
No degree needed. We hired a high schooler last month.
Open Roles:
1. AI Engineering Intern (Full-time)
2.…