செய்திகள் :

Malavika Mohanan: "'மாஸ்டர் படத்துல ரொம்ப அழகா இருந்தீங்க'னு ரஜினி சார் சொன்னார்"- மாளவிகா ஓபன் டாக்

post image
தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்', விக்ரமுடன் 'தங்கலான்' படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

தமிழில் அவ்வப்போது நடித்தாலும், மலையாளத் திரையுலகில் இப்போது முழு கவனம் செலுத்தி பிஸியாகியிருக்கிறார். சமீபத்தில் மலையாளத் திரையுலகின் ஜாம்பவான்களான நடிகர் மோகன் லால், இயக்குநர் சத்யன் அந்திகாட் இணைந்துள்ள 'ஹிருதயப்பூர்வம்' என்ற படத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

ரஜினி, விஜய், மாளவிகா மோகனன்
ரஜினி, விஜய், மாளவிகா மோகனன்

இந்நிலையில் 'மாஸ்டர்' படம் வெளியான சமயத்தில், வாழ்த்துவதற்காக ரஜினிகாந்த் போன் செய்தது குறித்து 'Filmfare' தளத்திற்குப் பேசியிருக்கும் நடிகை மாளவிகா மோகனன், "மாஸ்டர்' ரிலீஸான 2 நாள்களுக்குப் பிறகு நிறைய போன் அழைப்புகள் எனக்கு வந்தன. அப்போது ரொம்ப பிஸியாக இருந்ததால் தெரிந்த நபர்களின் போன் அழைப்புகளை மட்டுமே எடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன்.

அந்தச் சமயத்தில் ரஜினி சார் போன் செய்திருக்கிறார். ஆனால் அது தெரியாமல் எடுக்காமல் விட்டுவிட்டேன். 'ஏன் சூப்பர் ஸ்டார் போன் அழைப்பை எடுக்கவில்லை' என்று என்னுடைய உதவி மேலாளர் ஒருவர் கேட்ட பின்புதான் எனக்கு இந்த விஷயமே தெரியும்.

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்

அதன்பிறகு சூப்பர் ஸ்டாருக்கு போன் பண்ணி பேசினேன். அப்போது, 'மாஸ்டர் படத்தில் நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க. உங்க படம் அபார வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்' என வாழ்த்தினார். சினிமா துறையில் மொட்டாக வளர்ந்து வரும் என்னை சூப்பர் ஸ்டார் வாழ்த்தியதை என்னால் மறக்கமுடியாது" என்று பேசியிருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி இருக்கிறது மீஷா?

மிதுனும் (கதிர்) அனந்துவும் (ஹக்கீம் ஷா) இணை பிரியாத நண்பர்கள். ஜிகிரி தோஸ்தாக இருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய ஊரில் அரசியல் பிரமுகராக இருக்கும் ரகுவுக்கு (ஜியோ பேபி) விஸ்வாசமாக இருக்கிறார்கள். ... மேலும் பார்க்க

DQ: "எனக்குப் பிரச்னை என்றால் முதலில் வருவது நீங்கள்தான்" - துல்கர் சல்மான் குறித்து நடிகை கல்யாணி

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்த நாள் இன்று. மலையாளம், தமிழ், தெலுங்கு எனத் தென்னிந்திய சினிமாவில் தொடர்ச்சியாகப் பல ஹிட் படங்கள் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். குறிப்பாக, துல்கர் கடைசியாக நடித்திரு... மேலும் பார்க்க

Fahad Fazil: "பார்சிலோனாவில் ஊபர் டிரைவராக வேலை செய்வேன்" - ஃபகத்தின் விநோத ஓய்வு திட்டம்!

இந்தியா முழுவதும் அறியப்படக் கூடிய மலையாள நடிகர் ஃபகத் பாசில். தமிழிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார். தற்போது வடிவேலுவுடன் நடித்துள்ள மாரீசன் படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் சூழலி... மேலும் பார்க்க

Mohanlal: மோகன்லாலை சந்தித்த பகத், நஸ்ரியா; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

மோகன்லால், பகத் பாசில், நஸ்ரியா ஆகியோர் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘எம்புரான்’, ‘துடரும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஹிருதயப... மேலும் பார்க்க

Drishyam 3:"கதையை காலை 3 மணிக்கு எழுதுவேன்; அதீதமான அழுத்தம், சவால்களை எதிர்கொண்டேன்! - ஜீத்து ஜோசப்

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு 'த்ரிஷ்யம்' திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் கவனம் ஈர்த்து, தமிழ், கன்னடம் என அடுத்தடுத்து ரீமேக் ஆகியது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி... மேலும் பார்க்க

பெண்ணாக உணரும் மோகன் லாலின் வைரல் வீடியோ.. ``இதற்கெல்லாம் ஒரு துணிச்சல் வேண்டும்" - குஷ்பு பாராட்டு

மலையாளத்தில் மாஸுக்கும், நடிப்புக்கும் பெயர்போன நடிகர் மோகன் லால். ஒருபக்கம் ரசிகர்களைப் புல்லரிக்க வைக்கும் மாஸான திரைப்படங்கள், மறுபக்கம் நடிப்பின் உச்சத்தைக் காட்டும் வகையிலான திரைப்படங்கள் என மனங்... மேலும் பார்க்க