செய்திகள் :

ஊட்டி: ஹோட்டல் குளியலறை சுவரில் ஃபிளாஷ் லைட்; பதறிய பெண்; விசாரணையில் பகீர் தகவல்; என்ன நடந்தது?

post image

ஊட்டியில் கோடை‌ சீசன் நிறைவடைந்திருந்தாலும், தற்போது நிலவி வரும் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கேரளா மாநிலத்தைச்‌‌ சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 5-ம் தேதி குடும்பத்துடன் ஊட்டிக்குச் சுற்றுலா வந்திருக்கிறார்.

ஊட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் குடும்பத்துடன் தங்கி ஊட்டியைச்‌ சுற்றிப் பார்த்திருக்கிறார். தங்கும் விடுதியில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கையில் சுவரின் சிறிய துளையிலிருந்து திடீரென செல்போன் ஃபிளாஷ் லைட் ஒளிர்ந்திருக்கிறது.

சித்திரிப்புப் படம்

பதறிய அந்தப் பெண் உடனடியாக உடையை மாற்றிக் கொண்டு காவல்துறையினரைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார். சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தங்கும் விடுதியில் பணியாற்றி வந்த 30 வயதான நபர் ஒருவர், இளம்பெண்ணை வீடியோ எடுத்ததை உறுதி செய்துள்ளனர். உடனடியாக அந்த இளைஞனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்துள்ள காவல்துறையினர், "ஹோட்டல் பணியாளர்கள் தங்கும் அறையின் சுவரில் சிறிய துளை ஒன்று தென்பட்டது.‌ அதிலிருந்து பார்த்தால் அருகில் உள்ள தங்கும் விடுதியின் குளியலறை தெரிகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த ஹோட்டலில் ரூம் பாயாகப் பணியில் சேர்ந்த கேரளாவைச் சேர்ந்த 30 வயதான நித்திஷ் என்கிற நபர், அந்தத் துளை வழியாக செல்போன் மூலம் பெண்களை வீடியோ எடுத்து வந்திருக்கிறான். இதுவரை 5 பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்துள்ளான்.

spying

இந்த முறை வீடியோ எடுக்கையில் ஃபிளாஷ் லைட் ஆன் ஆகியிருக்கிறது. அதன் காரணமாகவே பிடிபட்டுள்ளான். அவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தங்கும் விடுதிகளில் பயணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

திருப்பூர் எஸ்எஸ்ஐ கொலை வழக்கு: முக்கியக் குற்றவாளி என்கவுன்டர்; இருவர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் காதல், 26 பவுன் நகை பறிப்பு, சுற்றிவளைத்த போலீஸ்; மாணவியை மிரட்டிய கர்நாடக இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி காதல் வலை விரித்து 26 பவுன் நகைகளை அபகரித்துச் சென்ற லிபின் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர... மேலும் பார்க்க

திருப்பூர்: ரூ.50 லட்சம் கேட்டு வரதட்சணை கொடுமை; தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்; கணவர் குடும்பம் கைது

திருப்பூர் தாராபுரம் சாலை பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. பிளீச்சிங் ஆலை நடத்தி வந்த குப்புசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுகந்தி. இந்தத் தம்பதியின் ஒரே மக... மேலும் பார்க்க

திருப்பூர் எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் முக்கிய குற்றவாளி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து கிராமம் உள்ளது. அங்கு மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சி.மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பில், தோட்டப்பராமரிப்புக்காக திண்டு... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலின் பின்னணி!

தஞ்சாவூர் கீழவாசல் தட்டான்தெரு பகுதியில் இளைஞர்கள் சிலர் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏற்படுத்திக்கொண்டு வந்துள்ளனர். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இத்தகைய போதைப்பழக்க... மேலும் பார்க்க

மசினகுடி: தந்தங்கள் மாயமான நிலையில் கிடந்த யானையின் எலும்புக்கூடு; வனத்துறை விசாரணை!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், மசினகுடி அருகில் உள்ள பொக்குபுரம் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் யானையின... மேலும் பார்க்க