Gangaikonda Cholapuram Temple History | கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உருவான வரலாறு...
சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!
சின்ன திரை வரலாற்றில் முதல்முறையாக, மூன்று தொடர்களின் காட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
வெள்ளித் திரைக்கு இணையாக சின்ன திரை தொடர்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்பெல்லாம் பெண்களை மட்டுமே மையப்படுத்தி தொடர்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆண்கள், இளம் வயதுடையவர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலமாக, இரு தொடர்களின் கதைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இரு தொடர்களின் சங்கமம் என்று ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது 3 தொடர்களின் கதைகள் ஒருங்கிணைக்கப்பட்டு முதல் முறையாக திரிவேணி சங்கமாக ஒளிபரப்பப்படுகிறது.
டிஆர்பி ரேட்டிங்கை கூட்டும் வகையிலும், ஒரு தொடரின் ரசிகர்களை மற்றொரு தொடரையும் பார்க்கவைக்கும் நோக்கத்திலும் மூன்று தொடர்களின் பாத்திரங்களை வைத்து புதிதாக கதைச்சூழல் அமைக்கப்பட்டு தொடர்களின் திரிவேணி சங்கமம் என்ற பெயரில் ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் செப்டம்பர் 2வது வாரம் கயல், அன்னம், மருமகள் ஆகிய மூன்று தொடர்களின் காட்சிகள் இணைக்கப்பட்டு இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இந்த 3 தொடர்களின் ஒருங்கிணைக்கப்பட்டக் காட்சிகளைக் காண ரசிகர்கள் ஆவலாகவுள்ளனர்.
சின்ன திரை வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்று எடுக்கப்படுவதால், இதற்கு வரவேற்புக் கிடைத்தால் பிற தொலைக்காட்சியிலும் இந்தப் புதிய முயற்சியில் இறங்குவார்கள்.
இதையும் படிக்க: டிரெண்டிங் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!