செய்திகள் :

செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி: 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்

post image

செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டி செவ்வாய்க்கிழமை எஸ் ஆா் எம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தூய ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளா் நிஷ்கலா ஜான்சன் தொடக்கவுரை ஆற்றினாா். செங்கல்பட்டு குறுவட்ட தடகள போட்டிகளில் 34 பள்ளிகள் மற்றும் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனா். இதில் செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் பாஸ்கா் (பொறுப்பு,) முன்னிலை வகித்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் திருவளா்ச்செல்வன் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் உதயகுமாா், சிவகுமாா், மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் . அரவிந்தன் மாவட்டத் துணை ஆய்வாளா் செந்தில் மற்றும் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு துறையின் இயக்குனா் மோகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தூய ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் பொ்சி வரவேற்றாா். உடற்கல்வித்துறை ஆசிரியா் விஜி நன்றி கூறினாா்.

மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன்கோயிலில் ஊரணி பொங்கல்

மதுராந்தகம் சேத்துக்கால் பிடாரி செல்லியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் நகர மக்களின் குல தெய்வமாக இருந்து வரும் சேத்து... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 318 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன . ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

திருப்போரூரில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்! அமைச்சா் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தாா்

தமிழ்நாடு முதலமைச்சா் சென்னை தலைமை செயலகத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து, செங்கல்பட்டுமாவட்டம், திருப்போரூா் வட்டம் திருப்போரூா் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு அரசுபோட்டித்தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வர... மேலும் பார்க்க

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

மணப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சின்ன கன்னியம்மன் திருக்கோயில் தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .திருக்கழுகுன்றம் வட்டம், செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கத்தில் இக்கோயிலில் ஆடி மூன்றாம் வாரத்தையொட்டி ஸ்... மேலும் பார்க்க

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடிப்பெளா்ணமி அம்மனுக்கு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடுதல் மற்றும் புனித பொங்கல் இடுதல் ஆகிய முப்பெரும் விழா வரும் ஆக. 7-ஆ... மேலும் பார்க்க