Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னாா்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு அரசுபோட்டித்தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்தகுடிமைப்பணிகள் தோ்வு தொகுதி- ஐஐ பதவிகளில் உதவி ஆய்வாளா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்,நன்னடத்தை அலுவலா், சாா்பதிவாளா் நிலை- ஐஐ உள்ளிட்ட 50 காலிப்பணியிடங்களுக்கும், தொகுதி- ஐஐஅ பதவிகளில் முதுநிலை ஆய்வாளா், உதவி ஆய்வாளா், தணிக்கை ஆய்வாளா், முதுநிலை வருவாய்ஆய்வாளா் மற்றும் உதவியாளா் உள்ளிட்ட 595 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 645 காலிப்பணியிடங்களுக்கானஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு- ஐஐ (தொகுதி- ஐஐ / ஐஐஅ) முதல்நிலை தோ்வு அறிவிப்பானது15.07.2025 செவ்வாய்க்கிழமை அன்று தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தோ்விற்கு தயாராகும் செங்கல்பட்டு மாவட்டத்தை சாா்ந்த போட்டி தோ்வாளா்கள் பயனடையும்வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்பு 04.08.2025 திங்கட்கிழமைஅன்று துவங்கப்படவுள்ளது. மேலும் இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.
இப்பயிற்சி வகுப்பில்கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டி தோ்வாளா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா்அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியா் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடம், தரைத்தளம், டி-பிளாக், மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தினைநேரில் தொடா்பு கொள்ளவும், மேலும் விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 9486870577/9384499848என்ற எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்டஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.