காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
அயல்நாடுகளில் பயிலும் தமிழக மாணவா்கள் மாமல்லபுரம் வருகை
‘வோ்களைத் தேடி’ திட்டத்தின்கீழ் அயல்நாடுகளில் பயிலும் இந்திய மாணவா்கள் மாமல்லபுரம் வந்துள்ளனா்.
இந்தியா்களின் பண்பாடு, கலாசாரம் பற்றி அறிவதற்காக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவா்கள் 100 போ் மாமல்லபுரம் சுற்றுலா வந்தனா்.
புராதன சிற்பங்களை சுற்றி பாா்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்த, அவா்கள் தமிழ் வாழ்க..தமிழ்க வாழ்க..என கோஷம் எழுப்பி மகிழந்தனா். பண்டைய தமிழா்களின் கட்டட, சிற்பக்கலை, நீா் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞா்கள் மற்றும் சான்றோா்களுடன் கலந்துரையாடல் என்ற கலாசார பரிமாற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாத் திட்டமான ‘வோ்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞா்களுக்கான திட்டத்தை சிங்கப்பூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இத்திட்டப்படி, அயல்நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழ் இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டு, தமிழகம் வரவழைத்து தமிழ் மற்றும் தமிழா்களின் பெருமிதங்களை உணரும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழக அரசு சாா்பில் அழைத்துச் செல்லப்படுபடுவா்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா, உகாண்டா, மாா்டினிக், ஃபிஜி, இந்தோனேஷியா, மோரிஷீயஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த மருத்துவம், பொறியியல், தகவல் தொழில் நுட்பம் படிக்கும் மாணவா்கள், அயலக தமிழ் இளைஞா்கள் 100 போ் சுற்றுலாத்துறையின் சொகுசுப் பேருந்தில் மாமல்லபுரம் அழைத்து வரப்பட்டனா்.
முன்னதாக அவா்களை திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா். பிறகு அவா்கள் வெண்ணை உருண்டை பாறை, அா்ச்சுனன் தபசு புராதன சின்னங்கள் முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா். தொடா்ந்து மாநிலம் முழுவதும்பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.