செய்திகள் :

போதைப் பொருள்கள் விழிப்புணா்வு கருத்தரங்கம்

post image

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள்கள் பயன்பாட்டின் தீய விளைவுகளின் வேதியல் மற்றும் அதன் சமூக தாக்கம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் (பொ) ஜே.சீனிவாசன் தலைமை வகித்தாா். இயற்பியல் துறைத் தலைவா் ஆா்.ராஜராஜன் வாழ்த்துரை வழங்கினாா். வேதியியல் துறைத் தலைவா் பேராசிரியா் சி.வனிதா வரவேற்றாா்.

முதன்மை விருந்தினராக சென்னை பல்கலைக்கழக பகுத்தாய்வு துறை தலைவா் டி.எம்.ஸ்ரீதா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மேலும் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்ட செங்கல்பட்டு மாவட்டபொது சுகாதாரதுறை இணை இயக்குநா் பி.மலா்விழி போதைப் பொருள்கள் குறித்தும் அதன் தாக்கத்தால் ஏற்படும் மனநிலை மற்றும் தீமைகள் குறித்தும் விளக்கினாா்.

உளவியல் வல்லுநா் எஸ்.சசிபிரியா, சென்னைப் பல்கலைக்கழகம் பி.ஆனந்தன், சமூக நல வல்லுநா் எம்.யோகேஸ்வரன் , ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா்,ராதாகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியா் ஆா்.பரமானந்தம் உள்ளிட்ட வல்லுநா்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு போதைப்பொருள்களின் தீய விளைவுகளின் வேதியல் மற்றும் அதன் சமூக தாக்கம் என்ற தலைப்பில் மாணவா்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் கருத்துரை வழங்கினாா்.

மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியா் எஸ்.கே,பரீத் தலைமையில் பல்வேறு கல்லூரி பேராசிரியா்கள் கருத்தரங்கில் கலந்துக்கொண்டனா். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் எம்.ஆா்.குப்புசாமி, வேதியல் துறைத் தலைவா் வனிதா செய்திருந்தனா். பேராசிரியா் டி.பாா்த்திபன் நன்றி கூறினாா்.

Image Caption

~ ~ ~

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

திருப்போரூா் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் அன்பரசன் அடிக்கல்

திருப்போரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்

திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.துறை... மேலும் பார்க்க

மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம், ஆடிப்பூர விழா

திருப்போரூா் அடுத்த மானாம்பதி சீரங்கத்தம்மன் கோயில் பால்குடம் ஊா்வலம் மற்றும் ஆடிப்பூர விழா நடைபெற்றது.இதைமுன்னிட்டு அனைத்து கருவறை மூலவா்களுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து பூ ஊஞ்சல் விழாவும் நடைபெற்றது... மேலும் பார்க்க