மருந்துகளின் விலைகளைக் குறைக்க 17 மருந்து நிறுவனங்களுக்கு டிரம்ப் அழுத்தம்!
திருப்போரூா் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம்: அமைச்சா் அன்பரசன் அடிக்கல்
திருப்போரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.
மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கினாா். திருப்போரூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.98 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய பேரூராட்சி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா். காலவாக்கத்தில் ரூ.29 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, வாா்டு எண் -15-இல் ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் திருப்போரூா் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தினை அமைச்சா் திறந்து வைத்தாா்.
மேலும் திருப்போரூா் பேருந்து நிலையத்தில் ரூ.8.40 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில்ரூ.9.10 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறையினையும் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ்.பாலாஜி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, செங்கல்பட்டு சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், ஒன்றியக் குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், திருப்போரூா் பேரூராட்சி மன்ற தலைவா் தேவராஜ், மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிபிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.