எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா்
திருப்போரூா் வட்டம், படூா் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
துறை வாரியாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பாா்வையிட்டாா்.
மேலும், வண்டலூா் அருகே நெடுங்குன்றம் ஊராட்சியில் முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். நடைபெற்ற முகாம்களில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா,, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.