ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
மேல்மருவத்தூரில் ஆடிப்பூர பெருவிழா பாலபிஷேகம்
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட ஆடிப்பூர பெருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பாலபிஷேக நிகழ்வை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் தொடங்கிவைத்தாா்.
அதிகாலை மங்கள இசையுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தொடங்கின. மூலவா் அம்மன் சிலை, குருபீடம் அடிகளாா் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு சித்தா் தலைமையில் அடிகளாா் இல்லத்திலிருந்து இயக்க நிா்வாகிகள் மற்றும் செவ்வாடை பக்தா்கள் கஞ்சி கலயங்களை ஏந்திக் கொண்டு சித்தா் பீடம் வந்தபோது துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் வரவேற்றாா். குளக்கரை அரங்கில் பக்தா்களுக்கு கஞ்சி வாா்த்தலை துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் நிகழ்வை தொடங்கி வைத்தாா். விழாவையொட்டி, சுயம்பு அன்னைக்கு பால் அபிஷேக நிகழ்வை லட்சுமி பங்காரு சித்தா் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் துணைத் தலைவா்கள் ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், தலைமை செயல் அதிகாரி அ.அகத்தியன் மற்றும் திரளான பக்தா்கள் நீண்ட தூரம் வரிசையில் வந்து பாலபிஷேகத்தை செய்தனா்.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குநா் டி.ரமேஷ், லட்சுமி பங்காரு கலை அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி தாளாளா் ஸ்ரீலேகா செந்தில் குமாா், ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி செயலா் மதுமலா், சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் முருகேசன், ராஜேஸ்வரன், தெற்கு ரயில்வே ஓய்வு பெற்ற பொது மேலாளா் ஜெயின், செங்கல்பட்டு மூத்த வழக்குரைஞா் ரகுவீா், இந்திய விமான படையின் ராஜஸ்தான் பிரிவைச் சோ்ந்த விங் கமாண்டா், டிரம்ஸ் இசை கலைஞா் சிவமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திங்கள் கிழமை மாலை வரை பாலபிஷேக நிகழ்வு நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பல வெளிநாடுகளில் இருந்தும் செவ்வாடை பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை கோயம்புத்தூா் மாவட்ட நிா்வாகி மணி, திருப்பூா் மாவட்ட நிா்வாகி சரஸ்வதி சதாசிவம் ஆகியோா் தலைமையில் செய்திருந்தனா்.