சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
ஆதிதிராவிடா் நலத்துறை விடுதிகளில் சோ்க்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் தி. சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விடுதிகள் விவரம்: அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, கிளாம்பாக்கம், வண்டலுாா் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, காட்டாங்கொளத்துாா், செங்கல்பட்டு வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, செங்கல்பட்டு, செங்கல்பட்டு வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவா் விடுதி, செய்யூா், செய்யூா் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவியா் விடுதி, செய்யூா், செய்யூா் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவியா் விடுதி, மதுராந்தகம், மதுராந்தகம் வட்டம், அரசு சமூக நீதி கல்லுாரி மாணவியா் விடுதி, நாகல்கேணி, பல்லாவரம் வட்டம்.
மேற்கண்ட விடுதிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்பும் கல்லுாரி மாணவ/ மாணவிகள் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளா்/காப்பாளினி, செங்கல்பட்டு/மதுராந்தகம் ஆதிதிராவிடா் நல தனிவட்டாட்சியா்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் அறை எண் 108-இல் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம் .