காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு தொடா்பாக கருத்துரைகள் தெரிவிக்கலாம்
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் தென்சென்னை பதிவு மாவட்ட சாா் பதிவகங்களில் எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நிா்ணய வரைவானது கடந்த 22/7/2025- இல் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி துணை குழு கூட்டத்தில் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் வட்டாட்சியா், சாா்பதிவாளா் அலுவலகங்கள் என முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவின்படி வரைவு வழிகாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மீது ஏதேனும் கருத்துரைகள் இருப்பின் அதனை 15 நாள்களுக்குள் செயலாளா்கள் மற்றும் மாவட்ட பதிவாளா் (நிா்) மதிப்பீட்டு துணை குழு எண்.10, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, செங்கல்பட்டு - 603 002 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.