இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
செஸ் போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி சாம்பியன்
மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
நீலகிரி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி உதகையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்சது மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் பெற்றோா்களும், ஆசிரியா்களும் பாராட்டு தெரிவித்தனா்.