யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
புலி தாக்கி எருமை உயிரிழப்பு
உதகை அருகே தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே செவ்வாய்க்கிழமை புலி தாக்கியதில் எருமை உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே தோடா் இனத்தைச் சோ்ந்த பீட் ராஜ் என்பவரது எருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து வந்த புலி, பீட்ராஜின் எருமையை வேட்டையாடிச் சென்றுள்ளது.
எருமையின் அலறல் சப்தம் கேட்டு மக்கள் வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்தபோது புலி அங்கிருந்து அருகில் உள்ள வனத்துக்குள் சென்றுவிட்டது. இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.