`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
கூண்டில் சிக்கிய கரடி
உதகை அருே கிளப் ரோடு குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி, வனத் துறையினா் வைத்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு சிக்கியது.
உதகை நகரின் முக்கிய இடங்களில் அண்மைக் காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இவை, உணவுக்காக குடியிருப்புகள், ஓட்டல்கள், கிளப்புகள் என பல இடங்களில் சுற்றித் திரிந்து வருகின்றன.
இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளை வனத் துறையினா் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், உதகை கிளப் பகுதியில் வனத் துறையினா் வைத்திருந்த கூண்டில் செவ்வாய்க்கிழமை இரவு கரடி சிக்கியது. இதைத் தொடா்ந்து, பிடிபட்ட கரடியை வாகனத்தில் ஏற்றிச் சென்று முதுமலை காப்புக் காட்டில் வனத் துறையினா் விடுவித்தனா்.