எஸ்டிஆர் - ராம்குமார் கூட்டணி... இருக்கு, ஆனா இல்லை!
நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமான படம் குறித்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.
நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. ’பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் இப்படம் உருவாக இருந்தது.
இதில் சிம்பு கல்லூரி மாணவராகவும் நீண்ட காலம் கழித்து சந்தானம் காமெடியனாகவும் நடிக்க ஒப்பந்தமானதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை மற்றும் சில கருத்து வேறுபாடுகளால் இப்படம் கைவிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதனால், இப்படத்திலிருந்து விலகிய சிம்பு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சிம்புக்காக நீண்ட நாள் காத்திருந்த இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்போது வேறு ஹீரோவிடம் கதையைக் கூறி வருவதாகவும் தகவல்.
இந்த நிலையில், பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது வாங்கிய ராம்குமார் நேர்காணலில், “நானும் நடிகர் சிலம்பரசனும் இணையும் படம் சில காரணங்களால் தள்ளிச்செல்கிறது. அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு வந்ததும் இப்படம் துவங்கும்” எனத் தெரிவித்துள்ளார். இயக்குநரே படம் கைவிடப்படவில்லை எனக் கூறினாலும் ரசிகர்களிடம் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு: அமலாக்கத் துறைக்கு ரூ. 30,000 அபராதம்!