வட மாநிலத்தவர்களை இங்கு சேர்ப்பது தவறானது; ஊழலும்கூட: நயினார் நாகேந்திரன் பேட்டி
கும்பகோணத்தில் காளியம்மன் திருநடன உற்சவம்: திரளானோர் வழிபாடு!
பிரசித்தி பெற்ற ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆடி மாத திருநடன உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டும், பிராத்தனைகள் செய்தும் வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான இலுப்பையடி தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் காப்பு கட்டி திருநடன திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இவ்விழா கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ காயத்திரி காளியம்மன் திருநடன திருவீதியுலா இன்று நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆலய வளாகத்தில் இருந்து துவங்கியது. முன்னதாக ஏராளமான பெண்கள் தாய் வீட்டு சீதனமாக தேங்காய், பழங்கள், பூக்கள், பூ மாலைகள் கொண்ட வரிசை தட்டுக்கள் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து ஆலயத்திலிருந்து வெளியே வந்த காயத்திரி காளியம்மனை ஆலய முன்பு சுற்றிலும் கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் நான்கு புறமும் சூழ்ந்து நின்று பூமாரி பொழிய, மலர் மாலைகள் அணிவித்தும், காளியம்மன் உற்சாகமாக வரவேற்க, லட்சுமி விலாஸ் தெரு, உப்புக்காரத்தெரு, ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு என நான்கு வீதி சந்திப்பில், திருநடனம் புரிந்தார், அப்போது, திருநடனம் புரிந்து வீதியுலாவாக வந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.