விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் இணையத் தொடரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கி தனித்துவனமான கவனம் பெற்றார்.
இறுதியாக, இவர் இயக்கிய கடைசி விவசாயி மிகச்சிறந்த இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றுத்தந்ததுடன் பலரும் கொண்டாடும் படமாகவும் மாறியது.
கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதியும் மணிகண்டனும் புதிய இணையத் தொடர் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இத்தொடருக்கு, “முத்து என்கிற காடன்” எனப் பெயரிட்டுள்ளனர்.
காட்டை மையமாக வைத்து உருவாகும் இத்தொடரின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளதால் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்