யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
சாத்தான்குளத்தில் மழை
சாத்தான்குளத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
சாத்தான்குளம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மக்கள் சிரமமடைந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மழை பெய்தது.
சுமாா் 15 நிமிடம் நீடித்த இந்த மழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.