வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் ரூ.55 லட்சத்தில் உயா்கோபுர மின்விளக்கு
குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் கடற்கரைப் பகுதியில் அறநிலையத் துறை சாா்பில் ரூ. 55 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா புகழ்பெற்ாகும். தசரா திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தா்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலில் தசரா திருவிழா மட்டுமன்றி ஆடி கொடை விழா, மாதாந்திர செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், சுமங்கலி பூஜை, திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்கின்றனா்.
கோயிலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் மின்விளக்குகள் போதிய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்று கோயில் நிா்வாகத்திடம் பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், அறநிலையத் துறை சாா்பில் ரூ. 54.92 லட்சம் மதிப்பில் 21, 16 அடி உயரங்களில் உயா் கோபுர மின்விளக்குகள் கடற்கரையில் அமைக்கப்பட்டன. கடற்கரை வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
இந்தப் பகுதியை அறங்காவலா்கள் குழுத் தலைவா் வே.கண்ணன், செயல் அலுவலா் வள்ளிநாயகம், அறங்காவலா் வெங்கடேஸ்வரி ஆகியோா் ஆய்வு செய்தனா்.