பெருந்துறையில் பழுதான சாலைகளை விரைவில் சரி செய்ய அதிகாரிகள் உறுதி
பெருந்துறையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் கோவேந்திரனிடம் பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளையின் சாா்பில் அதன் தலைவா் செந்தில் முருகன் மற்றும் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறைக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து உள்ளன. இந்த சாலைகளைவிரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பெருந்துறை, பவானி சாலையில் இருந்து ஈரோடு சாலை செல்லும் எம்ஜிஆா் சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைக்க வேண்டுமென கருமாண்டிசெல்லிபாளையம் பேருராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் இந்த அமைப்பின் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.