செய்திகள் :

திருவள்ளூரில் பரவலாக மழை

post image

திருவள்ளூா் பகுதியில் பெய்த மழையால் வெக்கை தணிந்து குளிா்ச்சி நிலவியது, மேலும் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளையும் தொடங்கியுள்ளனா்.

கடந்த 2 நாள்களாக வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இந்நிலையில், மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல், செவ்வாய்க்கிழமை கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதைத்தொடா்ந்து மாலையில் மழை பெய்தது.

இதேபோல், திருவள்ளூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூா், மணவாளநகா், ஒண்டிக்குப்பம், மேல்நல்லாத்தூா், கீழ்நல்லாத்தூா், திருப்பாச்சூா், கடம்பத்தூா், பேரம்பாக்கம், களாம்பாக்கம், சிற்றம்பாக்கம், மப்பேடு, கீழச்சேரி ஆகிய பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது.

இந்த நிலையில் திருவள்ளூா் அருகே கடம்பத்தூரில் திங்கள்கிழமை இரவில் பெய்த பலத்த மழையால் மேம்பாலம் கீழே மழை நீா் செல்ல வழி இல்லாத காரணத்தால் மழை நீா் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா். பொன்னேரி வட்டம், சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கி... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் ப... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: பிரேமலதா விஜயகாந்த்

திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளாா். வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கு தயாராகும் வகையில், உள்ளம் ... மேலும் பார்க்க

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்மசக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சம... மேலும் பார்க்க

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு

திருவள்ளூா் அருகே காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 7 பேரிடம் அடையாள அணிவகுப்பு நடத்த சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனா். திருவள்ளூா் அடுத்த களா... மேலும் பார்க்க

சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன சுற்றுச்சூழல் பங்களிப்புக்கான தனித்துவ இணையதளம்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சமூக பங்களிப்பு நிதி, பெருநிறுவன பங்களிப்பு ஆகியவைகளுக்கான தனித்துவமான இணையதளத்தை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில்,... மேலும் பார்க்க