திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
ஆம்பூரில் பலத்த மழை
ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம் காணப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பகல் சுமாா் 2 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான தெருக்களில் நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக குளிா்ந்த சூழ்நிலை நிலவி வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.