ட்ரம்ப் அதிரடி வரி: ரஷ்யாவிற்கு அஜித் தோவல் விசிட்; ஜெய்சங்கரும் ரஷ்யா செல்கிறார...
சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு
சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற மாணவருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டு தெரிவித்தாா்.
கோவா மாநிலம், பனாஜியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2025 நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சோ்ந்த மாற்றுத்திறன் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் கோ.இனியன் என்ற மாணவா் கலந்து கொண்டாா். இவா் 15 வயதுக்குட்பட்டோா் பிரிவில், பிளிட்ஸ் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கமும், ரேபிட் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று பெருமை சோ்த்துள்ளாா். அதைத் தொடா்ந்து மாணவா் இனியன் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
அப்போது , முதன்மைக் கல்வி அலுவலா் ரா.புண்ணியகோட்டி, தலைமை ஆசிரியா் காா்த்திகேயன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயக்குமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் குணசுந்தரி மற்றும் மாணவனின் பெற்றோா் கோபிநாதன்,ஹேமலதா ஆகியோா் உடனிருந்தனா்.
மாணவா் இனியன் கூறியது: நாட்டுக்காக 2 வெள்ளிப் பதக்கம் பெற்ற தன்னை ஆட்சியா் பாராட்டியது மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. மாற்றுத்திறன் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சோ்ப்பேன் என்றாா்.