பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி
Sara Tendulkar: `சுற்றுலா பிரசாரத்துக்கு ரூ.1140 கோடி' - ஆஸ்திரேலியா பிராண்ட் தூதராக சச்சின் மகள்
லெஜண்டரி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, ஆஸ்திரேலியாவின் சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்திற்கான பிராண்ட் அம்பாசிட்டராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Come and Say G'Day என்ற இந்த பிரசாரம் உலகம் முழுவதும் சென்றடையக் கூடியது. 130 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1140 கோடி) மதிப்புமிக்க இந்த விளம்பர பிரசாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரும் எனக் கூறப்படுகிறது.
Sara Tendulkar பணி என்ன?
இதில் 27 வயது மாடல் சாரா, சர்வதேச பயணிகளை ஆஸ்திரேலியாவை சுற்றிப்பார்க்க அழைக்கும் பணியில் ஈடுபடப்போகிறார். இதற்காக அவர் உலகம் முழுவதும் வலம் வருவார் எனக் கூறப்படுகிறது.
இந்த பிரசாரத்தில் இங்கிலாந்து உணவு எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி சமையல்காரர் நிஜெல்லா லாசன், ஆஸ்திரேலிய வனவிலங்கு பாதுகாவலர் ராபர்ட் இர்வின், சீன நடிகர் யோஷ் யூ மற்றும் ஜப்பானிய நகைச்சுவை நடிகர் அபரேரு-குன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் சாரா.
ஆஸ்திரேலிய நடிகர் தாமஸ் வெதராலும் புதிய விளம்பரப் படைப்பில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது. 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுலாத்துறைக்காக சிஜிஐயில் உருவாக்கப்பட்ட ரூபி தி ரோ என்ற கங்காருவும் இதில் இடம்பெறவிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சாரா டெண்டுல்கர், இந்திய இளைஞர்களை ஆஸ்திரேலியாவை நோக்கி கவர்ந்திழுப்பார் என நம்பப்படுகிறது. இது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த உதவும்.