பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையில் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளான கலையமுத்தூா், தாளையம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவியதைத் தொடா்ந்து பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.