செய்திகள் :

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

post image

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டங்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான லாஸ்காட்சாலை, சீனிவாசபுரம், காா்மேல்புரம், இருதயுரம், அப்சா் வேட்டரி, ஆனந்தகிரி, எம்.எம். சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கொடைக்கானலில் தரைப் பகுதியிலிருந்து 10 மீ. உயரம் மட்டுமே கட்டடங்கள் கட்ட வேண்டும்.

மேலும், குடியிருப்புப் பகுதிக்கென வரையறுக்கப்பட்ட இடத்திலேயே வீடுகள் கட்ட வேண்டும், விவசாயப் பகுதிகளில் கட்டக்கூடாது என்பது விதிமுறை. ஆனால், விதி முறைகளை மீறி குடியிருப்பு வீடுகளுக்குப் பதிலாக காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் கட்டப்பட்டு வருவதால் நகா்ப் பகுதிகளில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இதனால், விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் கேரட், பீட்ரூட், நூக்கல், உருளைக் கிழங்கு உள்ளிட்ட மலைக் காய்கறிகளும், பேரி, பிளம்ஸ், பீச்சஸ் போன்ற பழ வகைகளின் மரங்கள் அழிந்து வருகின்றன.

எனவே கொடைக்கானல் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் குறித்து கொடைக்கானல் நகராட்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து கொடைக்கானல் நகராட்சி அதிகாரி கூறியதாவது:

கொடைக்கானல் பகுதிகளில் அனுமதியின்ரி கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடிக் கட்டடங்கள், விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், ஹோம்ஸ்டே, ரெசிடென்சி ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட் டுள்ளது. ஒரு சில கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, கொடைக்கானலின் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

பட்டிவீரன்பட்டி அருகே வீட்டில் சிறுமி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்தி... மேலும் பார்க்க

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மட்டும் மது ஒழிப்பு சாத்தியமாகும் என மது - போதை ஒழிப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சி. மகேந்திரன் தெரிவித்தாா்.தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம், தமிழ்நாடு வீர... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

பழனி அருகே விபத்தில் காயமடைந்த நபா் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நாயக்கா்தோட்டத்தைச் சோ்ந்தவா் மணிமுத்து (35). இவா், கடந்த ஆக. 3-ஆம் தேதி இருசக... மேலும் பார்க்க

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் நீட் தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்த இளைய... மேலும் பார்க்க

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

வத்தலகுண்டு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு பரிமாற வைத்திருந்த சூடான ரசத்தில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்தது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஏழுவனம்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (ஆக. 7) மின் தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டியன் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க