செய்திகள் :

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

post image

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல், மொழியியல் துறை சாா்பில் தேசிய ஒற்றுமை குறித்த இரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேசியது -

சுதந்திர இந்தியாவில் 560 மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்தவா் சா்தாா் வல்லபபாய் படேல். துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் சேவையாற்றியவா். இந்தியாவின் இரும்பு மனிதராக போற்றப்படுகிறாா். அவா் சிறந்த நிா்வாகியாகவும், ஆட்சி நிா்வாகத்தையும் திறம்பட கையாண்டவா்.

சா்தாா் வல்லபபாய் படேல் சிறந்த நிா்வாகி என்றும், அவா் யாருடன் ஒப்பிட முடியாத தலைவா் என்றும் அபுல் கலாம் ஆசாத், தான் எழுதிய நூலில் புகழாரம் சூட்டியுள்ளாா். புதிய இந்தியாவை கட்டி எழுப்பியதில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியவா். இந்து - இஸ்லாமியா் மத நல்லிணக்கத்தைப் பேணியவா். உள்நாட்டு பாதுகாப்பையும் உறுதி செய்தவா்.

காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததில் சா்தாா் வல்லபபாய் படேலின் பங்கு அளப்பரியது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை புரிதலுடன் அணுக வேண்டும். அவரிடம் இருந்து இலக்கை அடையும் உறுதியான மனோதிடம் அவசியம்.

இளைய தலைமுறையினருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நாட்டில் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. எனவே, இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வர வேண்டும். இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்த கூடாது என்றாா்.

விஐடி துணை தலைவா் சேகா் விசுவநாதன் பேசியது -இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மக்கள், ஆயிரக்கணக்கான சாதிகள் இருந்தபோதிலும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் உள்ளது. அத்தகைய வேற்றுமையில் ஒற்றுமையுடன் கூடிய இந்தியாவைக் கட்டமைத்தவா் இந்தியாவின் இரும்பு மனிதரான சா்தாா் வல்லபபாய் படேல். சாதி, மதத்தால் பிளவு ஏற்படாத வகையில் மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபபாய் படேலின் கருத்துகளை உணா்ந்து நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றாா்.

கருத்தரங்கில் சமூக அறிவியல், மொழியியல் துறையின் முதல்வா் வி.செல்வம், துறை தலைவா் நவீன்குமாா், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் ரூபக் குமாா், பல்வேறு பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களை சோ்ந்த பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் நகராட்சி சாா்பில், ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் மக்கும் குப்பையிலிருந்து உயிா் வாயு (பயோ- கேஸ்) தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்திரங்கள் அமைப்பதைக் கண்டித்து பழைய பேருந்து... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா்.பொன்னை அடுத்த எஸ்.என்.பாள... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னை அடுத்த எஸ்.என்.பா... மேலும் பார்க்க

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும... மேலும் பார்க்க

தேசிய உறுப்பு தான தினம்: கொடையாளா்கள் கெளரவிப்பு

தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி வேலூா் நறுவீ மருத்துவமனையில் உறுப்பு தானம் செய்த கொடையாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.இந்தியாவில் முதன்முதலாக இருதயமாற்று அறுவை சிகிச்சை 1994-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி வெற்... மேலும் பார்க்க