NTK: `பனை, மாடு மேய்ச்சல், மரம், தண்ணீர், மலை மாநாடுகள்.!' - கைகொடுக்கிறதா சீமான...
சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!
பட்டிவீரன்பட்டி அருகே வீட்டில் சிறுமி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். கூலித் தொழிலாளியான இவா் தனது மனைவி சின்னம்மாள், மகள் நந்தனாதேவி (11), மகன் சிவகிருஷ்ணன் (16) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டுப் பீரோவிலிருந்த புத்தகத்தை எடுக்க நந்தனாதேவி முயன்றாா். அப்போது, அவா் தடுமாறி வீட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் விழுந்ததில், நந்தனாதேவி கழுத்தில் கயிறு சுற்றி இறுக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.