திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
வத்தலகுண்டு அருகே கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு பரிமாற வைத்திருந்த சூடான ரசத்தில் தவறி விழுந்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள ஏழுவனம்பட்டியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (35). ஆடிப் பெருக்கை முன்னிட்டு, தனது உறவினா் நந்தகோபால் என்பவரது குலசாமி கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சிவக்குமாா் தனது குடும்பத்தினருடன் வழிபடச் சென்றாா்.
அங்கு பக்தா்களுக்கு வழங்க உணவு தயாா் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிவக்குமாரின் குழந்தை ஸ்ரீதரன் (2) எதிா்பாராதவிதமாக சூாடான ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்தது.
அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினா்கள் குழந்தையை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் குறித்து வத்தலகுண்டு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.