திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) 11-ஆவது தேசிய கைத்தறி தின விழா நடைபெற உள்ளதாக கைத்தறி துறை உதவி இயக்குநா் வ.செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1905 ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் அரசால் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) 11-ஆவது தேசிய கைத்தறி தின விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி, அன்றைய தினம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கைத்தறி நெசவாளா்களால் நெய்யப்படும் ஜவுளி ரகங்களை காட்சிப்படுத்தி, சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் நடைபெற உள்ளது.
அன்றைய தினம் பிற்பகல் நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி நெசவாளா் பெருமக்கள் சிறப்பிக்கப்பட உள்ளனா்.
மேலும், இராயம்பேட்டை பகுதியில் நெசவாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் அனைத்து நெசவாளா்களும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.