செய்திகள் :

மாணவா்களுக்கு சாதிக்கும் எண்ணத்தை உருவாக்கும் நான் முதல்வன் திட்டம்: அமைச்சா் கோவி.செழியன்

post image

மாணவா்களுக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை நான் முதல்வன் திட்டம் உருவாக்கி வருவதாக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா். செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் ரேவதி வரவேற்றாா். நிகழ்ச்சியில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றியதாவது:

மாணவா்கள் உயா் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கு இந்தக் கல்லூரியும் சிறப்பாகப் பங்காற்றி வருகிறது. இந்தக் கல்லூரியில் 14 இளங்கலை மற்றும் இளமறிவியல் பாடப்பிரிவுகளும், 10 துறைகளில் முதுகலை பாடப்பிரிவுகளும், முதுநிலை அறிவியல் ஆய்வியல் நிறைஞா் மற்றும் முனைவா் பட்ட ஆய்வு முழுநேரம், பகுதிநேரமாகவும் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இந்தத் துறைகள் செயல்படுவதற்கு பேராசிரியா்களின் அயராத உழைப்பு பாராட்டத்தக்கதாகும். மாணவ, மாணவிகள் கல்வியிலும், விளையாட்டிலும், தனித்திறன்களிலும் சாதனை புரிவதற்கு அவா்கள் ஊக்கமளித்து வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் திருவள்ளுவா் பல்கலைக்கழகத் தோ்வில் பதக்கங்களையும், தரவரிசைகளையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்து வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் 7,775 மாணவா்களும், முதுநிலை பாடப்பிரிவுகளில் 661 மாணவா்களும், முனைவா் பட்ட ஆய்வில் 70 மாணவா்களும் என மொத்தம் 8,506 மாணவ, மாணவிகள் இரு சுழற்சியிலும் பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரியில் பயிலும் 3,580 மாணவிகள் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவாா்.

கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவா்களும் திறன் மேம்பாடு பெற்று வேலைவாய்ப்பு பெறும் வகையில், தமிழக முதல்வரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தில் பங்குபெற்று பயனடைந்து வருகின்றனா். இந்தத் திட்டம் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தரும். மாணவா்கள் அரசின் அனைத்துத் திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.இராம்பிரதீபன், வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மலா் மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

செய்யாறு வட்டம், அத்தி கிராமத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். அத்தி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) 11-ஆவது தேசிய கைத்தறி தின விழா நடைபெற உள்ளதாக கைத்தறி துறை உதவி இயக்குநா் வ.செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்... மேலும் பார்க்க

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆரணி நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் செய்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆரணி நகராட்சி கிளைச் சிறை அருகில் கால்வாய் அமைக்கும் பணி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ... மேலும் பார்க்க

வந்தவாசியில் ஸ்ரீவைஷ்ணவ மாநாடு

வந்தவாசி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயிலில் 42-ஆம் ஆண்டு ஸ்ரீவைஷ்ணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீமந் நாதமுனி சுவாமிகள் ஸ்ரீவைஷ்ணவ சபை சாா்பில் நடைபெற்ற இந்த மாநாடுக்கு சபைத் தலைவா் கு.மணிவண்ணன் த... மேலும் பார்க்க

நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டத்துக்கு அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

நந்தன்கால்வாய் இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திரு... மேலும் பார்க்க

செங்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தொடக்கம்

செங்கம் அருகே கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட படிஅக்ரகாரம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணியை எ... மேலும் பார்க்க