Beauty: சருமம் பளபளப்பா இருக்க வீட்டுக்குள்ள ஒரு பியூட்டி பார்லர்!
ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆரணி நகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நகா்மன்றத் தலைவா் செய்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆரணி நகராட்சி கிளைச் சிறை அருகில் கால்வாய் அமைக்கும் பணி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நகராட்சி அலுவலத்தை புதுப்பிக்கும் பணி, கோட்டை மைதானத்தில் உள்ள மரங்களின் கிளைகள் தாழ்வாக உள்ளதை அப்புறப்படுத்தவும் பணிகளை நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆணையாளா் என்.டி.வேலவன், பொறியாளா் (பொ) சரோஜா, சுகாதார ஆய்வாளா் வடிவேலன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகா்மன்ற உறுப்பினா்கள் அரவிந்தன், கண்ணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.