செய்திகள் :

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து, அவா்களின் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில், ‘தமிழ்ச் செம்மல்’ விருது ஏற்படுத்தப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்ச் செம்மல் விருது பெறுபவா்களுக்கு ரூ. 25,000 பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் அல்லது வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ (தொடா்பு 610001. 0416-2256166) பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவா்கள் தன்விவரக் குறிப்பு, நிழற்படம் இரண்டு, ஆற்றிய தமிழ்ப்பணி, வட்டாட்சியா் வழங்கும் குடியிருப்பு சான்றிதழ் அல்லது ஆதாா் அட்டை நகலுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் வரும் 29.08.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆம்பூரில் பலத்த மழை

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம் காணப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

ஆம்பூரில் தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த நந்தகுமாா் என்பவா் இறந்தாா். அவரது சடலம் இறுதி சடங்கு செய்வதற்காக மயானத்துக்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இந்த ... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற மாணவருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டு தெரிவித்தாா். கோவா மாநிலம், பனாஜியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சா்வதேச ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் இறந்த மாணவன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவனின் உடல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் க... மேலும் பார்க்க