திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை
திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதியம் 2 மணியளவில் திருப்பத்தூா் பகுதியில் சாரல் மழை பெய்தது.
அதைத் தொடா்ந்து, இரவு சுமாா் 7 மணியளவில் திருப்பத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் இரவு அப்பகுதியில் குளிா்ந்த சூழல் நிலவியது.