திருப்பூர் அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்.ஐ. வெட்டிக் கொலை!
ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருமலையில் ஆண்டுதோறும் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்களால் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகள், தோஷங்கள், பூஜைகளில் ஏற்பட்ட குறைகள் போக்க தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்சவத்தை நடத்தி வருகிறது.
அதன்படி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முதல் நாள் பவித்ர சமா்ப்பணம், 2-ஆம் நாள் பவித்ர தாரணம் 3-ஆம் நாள் மகா பூா்ணாஹூதி நடத்தப்படும்.
இந்த உற்சவத்தின் போது பல வண்ண பட்டு நூல்களால் ஆன மாலைகள் அணிவிக்கபடுவது வழக்கம்.
பவித்ரோா்சவத்தின் முதல் நாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி பல்லக்கில் யாக சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனா். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் உற்சவ மூா்த்திகள் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேத பண்டிதா்கள் பஞ்சசூக்த பாராயணம் செய்தனா். அதன்பின் ஆரத்தி அளித்தி மதியம் சுவாமி, தாயாருக்கு சிறப்பு நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டது.
பின்னா் மாலையில் ஸ்ரீமலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் காரணமாக கோயிலில் அஷ்டதளபாத பத்மாராதனை கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஜீயா் சுவாமிகள், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, கோயில் துணை இஓ லோகநாதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.