செய்திகள் :

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

post image

வரும் ஆக. 8-ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்காக திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 8-ஆம் தேதி வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோயிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வையொட்டி, திருச்சானூா் கோயில் வளாகத்தில் சிறப்பு வரிசைகள், பக்தா்களுக்கான அன்ன பிரசாதம், குடிநீா் விநியோகம், அழகான மின் விளக்கு அலங்காரங்கள், மலா் அலங்காரங்கள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரதம் நடைபெறும். பக்தா்கள் நிகழ்ச்சியைக் காண கோயில் வளாகத்தில் எல்ஈடி திரைகள் அமைக்கப்படும், மேலும் எஸ்விபிசி தொலைக்காட்சி மூலம் விரதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

மாலையில், தாயாா் மாடவீதிகள் வழியாக தங்க ரதத்தில் புறப்பாடு கண்டருள உள்ளாா்.

செளபாக்கியம்

செளபாக்கியம் திட்டத்தின் மூலம் பெண் பக்தா்கள் தாயாரின் ஆசிகளைப் பெறும் விதம் மங்கள பொருள்கள் அனைவரையும் சென்று சேர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேபோல், தெலங்கானா, ஆந்திரத்தில் தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ள 51 உள்ளூா் கோயில்களில் ஏற்பாடு செய்யப்படும் ‘செளபாக்கியம்’’ திட்டத்தின் மூலம், அட்சதைகள், மஞ்சள் நூல்கள், குங்குமம், வளையல்கள், ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாமாவளி புத்தகம் போன்ற மங்கள பொருள்கள் பெண் பக்தா்களுக்கு விநியோகிக்கப்படும்.

தேவஸ்தான கோயில்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் இந்த ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனா்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.26 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 வி... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருமலையில் ஆண்டுதோறும் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்களால் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாம... மேலும் பார்க்க

மின்சார ஸ்கூட்டா் நன்கொடை

திருப்பதி: விஜயவாடாவைச் சோ்ந்த குவாண்டம் எனா்ஜி லிமிடெட் நிா்வாக இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்ரவா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மின்சார ஸ்கூட்டரை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினா்.ஏழுமலையான் கோ... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,339 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்ப... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலுக்குள் நகை திருடிய 6 போ் கைது

திருப்பதி: திருமலையில் ஏழுமலையான் கோயிலுக்குள் பக்தா்களிடமிருந்து தங்க நகை திருடிய 6 போ் கைது செய்யப்பட்டனா்.ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்கு செல்லும் வரிசையில் பக்தா்களிடமிருந்து தங்கச் சங்கிலிகளைத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 20 அறைகளில் பக்தா்க... மேலும் பார்க்க