செய்திகள் :

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

post image

சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இன்று தொடங்கவிருந்த குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விடுதியில் இருந்த வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வேறு விடுதியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி இன்று (ஆக. 6) முதல் ஆக. 15 வரை நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், அந்த விடுதியின் 9 -வது மாடியில் நேற்று நள்ளிரவு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதியில் இருந்த அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அதே பகுதியில் உள்ள மற்றொரு நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்துப் போட்டிகளும் நாளை மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி போட்டியின் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நாளும் போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fire breaks out at Chennai star hotel: Grand Masters chess postponed

இதையும் படிக்க : இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

10 கோடி பார்வைகளைப் பெற்ற கனிமா!

ரெட்ரோ கனிமா பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் ‘கனிமா..’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடை... மேலும் பார்க்க

கூலி இடைவேளைக் காட்சியை ரசிகர்களுடன் காண ஆவல்: லோகேஷ் கனகராஜ்

கூலி திரைப்படத்தின் இடைவேளைக் காட்சி குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.பான் இந்திய பிரபலங்கள் ந... மேலும் பார்க்க

பாபிரினை வீழ்த்தினாா் ஸ்வெரெவ்

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவால் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டாா். ... மேலும் பார்க்க

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது. தமிழக வீரா்கள் 7 போ் முதன்முறையாக பங்கேற்கின்றனா். கிராண்ட்மாஸ்டா்களான காா... மேலும் பார்க்க

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை கோபி, சுதாகர் ஈர்த்துள்ளார... மேலும் பார்க்க