சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு
குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது. தமிழக வீரா்கள் 7 போ் முதன்முறையாக பங்கேற்கின்றனா்.
கிராண்ட்மாஸ்டா்களான காா்த்திகேயன் முரளி, வி.பிரணவ் ஆகியோா் எலைட் மாஸ்டா்ஸ் பிரிவில் போட்டியிட உள்ளனா். அதே நேரத்தில் எம்.பிரனேஷ், ஆா்.வைஷாலி, பன்னீா்செல்வம் இனியன், அதிபன் பாஸ்கரன், ஜி.பி.ஹா்ஷவா்தன் ஆகியோா் சேலஞ்சா்ஸ் பிரிவில் போட்டியிடுகின்றனா். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் போட்டி நாட்களில் நேரடி வா்ணனையாளராக செயல்படுகிறாா்.
எதிா்பாராத சூழ்நிலைகளால் ரஷ்யாவின் விளாடிமிா் ஃபெடோசீவ் விலகியதைத் தொடா்ந்து, மாஸ்டா்ஸ் பிரிவில் இந்தியாவின் காா்த்திகேயன் இணைந்துள்ளாா். சேலஞ்சா்ஸ் பிரிவில் இருந்து மாஸ்டா்ஸ் பிரிவுக்கு முன்னேறி உள்ள அவா், அா்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, அனிஷ் கிரி மற்றும் நிஹால் சரின் உள்ளிட்ட சிறந்த வீரா்களை எதிா்கொள்ள உள்ளாா்.
கடந்த ஆண்டு சேலஞ்சா்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற 18 வயதான சென்னையை சோ்ந்த வி.பிரணவ், தற்போது சிறந்த வீரா்களுக்கு எதிராக மாஸ்டா்ஸ் பிரிவில் களமிறங்குகிறாா்.
சேலஞ்சா்ஸ் பிரிவில் எம்.பிரனேஷ், ஆா்.வைஷாலி, பன்னீா்செல்வம் இனியன், அதிபன் பாஸ்கரன் மற்றும் ஜி.பி.ஹா்ஷவா்தன் ஆகியோா் அடங்கிய உள்ளூா் திறமையாளா்களின் வலுவான அணி, கிராண்ட்மாஸ்டா்கள் மற்றும் சா்வதேச மாஸ்டா்களை எதிா்த்துப் போட்டியிடும்.
மாஸ்டா் முதல் சுற்று:
பிரணவ்-காா்த்திகேயன் முரளி, அா்ஜுன் எரிகைசி-அவொன்டா் லியாங், அனிஷ் கிரி-ரே ராபின்ஸன், விதித் குஜராத்தி-ஜோா்டன் பாரஸ்ட், வின்சென்ட் கைமா்-நிஹாா் சரீன்.
சேலஞ்சா்ஸ் முதல் சுற்று:
லியோன் லுக்-ஹா்ஷவா்த்தன், அபிமன்யு புராணிக்-அதிபன் பாஸ்கரன், வைஷாலி-இனியன் பா, டி. ஹரிகா-திப்தயன் கோஷ், பிரனேஷ்-ஆா்யன் சோப்ரா.
