செய்திகள் :

என் வாசிப்பின் ஆசான், என் வாழ்வின் அங்கம்! - நெகிழும் பெண் | #நானும்விகடனும்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நானும் விகடனும் நண்பர்கள். அப்பா கட்டிலில் தலையணையில் சாய்ந்துகொண்டு (வீட்டில் அப்போது ஷோபா சேர் எல்லாம்கிடையாது) விகடன் படிக்கும்போது அருகில் சாய்ந்து கொண்டு நானும் படித்த அந்த நாட்களை மறக்கமுடியாது. அவர் விகடனின் தலையங்கத்தில் இருந்து தான் தன் வாசிப்பை ஆரம்பிப்பார். முதலில் அது எனக்கு மிகவும் போரடிக்கும். போகப்போக சரியாகிவிட்டது.

தலையங்கம்தான் சமூகத்தின் முகம்காட்டும் கண்ணாடிஎன்றும் கார்ட்டூன் அதனை விமர்சிக்கும் வரைகோடு என்றும் திரும்பத்திரும்ப கூறுவார். அதன் பிறகுதான் விகடனின் எல்லாப் பக்கங்களையும் படிக்க ஆரம்பித்தேன். எல்லாப்பக்கங்களையும் படிக்கத் தரம்மிகுந்த இதழாக இருந்ததாலேயே அது சாத்தியமாயிற்று.

விகடனை படிக்க போட்டி ஆரம்பித்த காரணத்தால் வீட்டில் கல்கி துக்ளக் வானதி போன்றவையும் உலா வர ஆரம்பித்தன இருந்தாலும்விகடன் தான் நான் சண்டை போட்டு படிக்கும் முதல் இதழாகஇருந்தது. அது இன்றுவரை தொடர்கிறது.

அப்போதிருந்தே விகடன் தாத்தாவின் முகமும் முகப்பும் அட்டைப்படமும் மிகவும் பிடிக்கும். நாட்டு நடப்புகள், தொடர்கள், சிறுகதைகள், துணுக்குகள், பிரபலங்கள் அரசியல் தலைவர்களின் பேட்டிகள், பயணக்கட்டுரைகள், சினிமா விமர்சனங்கள் கவிதைகள்என அனைத்துமே மனதில் பதியக்கூடியவையாக இருக்கும்.

வாஷிங்டனில் திருமணம் தொடரில் விமானத்தில் எடுத்துச் சென்ற பொருட்களும் சென்றவர்களின் அலப்பறையும்..

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வாஷிங்டன் வீரன் சிலை கத்தியில் அப்பளங்கள் பறந்து விழுந்து மாட்டிக்கொண்டதும் போன்ற காட்சிகளை மறக்கமுடியுமா?! மணியனின் பயணக்கட்டுரையில் தென்பட்ட எதார்த்தங்கள் மனதைத்தொடும்.

கண்ணதாசன் தொடர்(என்பதாக ஞாபகம்) ஒன்றில் அறைத்தோழியின் 'பாதி நிலா வேளையிலே பாடம் படிக்கையிலே யார் கொடுத்த பட்டுச்சேலை இவ்வண்ணம் போடுதடி' என்ற கேள்விக்கு கதைநாயகியின்'பட்டுசேலை கட்டிக்கொள்ள கெட்டுப்போகத்தேவையில்லை' என்ற பதில்வரிகளும் அவ்வப்போது நினைவில் நிழலாடிச்செல்லும்.

பிரதமர் இந்திரா அம்மையார் இறந்தபோது இந்தியா வரைபடத்தில் r என்ற எழுத்து கண்ணீராய் கீழே விழ Indi a தவித்து நின்ற பிம்பத்தை எப்படி மறக்க முடியும்? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலைப் பார்க்கத் துடிக்கும் மாணவர் போல் சினிமா விமர்சனங்களுக்கு விகடன் போடும் மார்க்குக்காக ஏங்கும் கதாசிரியர்கள் இயக்குநர்கள் நடிகர்கள் வரிசை இன்றும் நீண்டுகொண்டே செல்கிறது.

ஆனந்த விகடன்

ஆனந்தவிகடன் என்னும் அடிமரத்தின் கிளைகளாக ஜூனியர் விகடன் பசுமை விகடன் அவள் விகடன் டாக்டர் விகடன் நாணய விகடன் மற்றும் விகடன் போன்றவை தழைத்தது மகிழ்ச்சியே. இந்த இதழ்களில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் மிளிர்வதும் மகிழ்ச்சியே. அனைத்தும் பயனுள்ளதாக பாராட்டத்தக்கதாக உள்ளன. ஆனால் கொரோனா காலத்தின் போது அவள் கிச்சன் என்ற கிளை முறிந்தது தான் வருத்தமாக உள்ளது.

நாட்டுக்கு மக்களுக்கு அரசுக்கு சமுதாயத்திற்கு ஏற்ப நாணயமான கருத்துக்கள் அவற்றை பிரதிபலிக்கக்கூடிய தரமான சித்திரஙகள்என அனைத்தையும் தாங்கி வரும் விகடன் படைப்புகள் யாவும் குன்றின் மேலிட்ட விளக்கே ஆகும்.

என்னதான் மாற்றங்கள் வந்தாலும் விகடன் தாத்தாவின் இளமையும் அழகும் அறிவும் ஆற்றலும் மாறவேயில்லை.அதே விரிந்த வியந்த புருவங்கள், ஒளி பாய்ச்சும் கண்கள் , எக்ஸ்ரே பார்வை, நல்லது. கெட்டதை பிரித்து முகரும் கூர் மூக்கு ,சமூக‌த்தின் முரசுப்பறை ஒலியை இழுத்துக்கொள்ளும் பெரிய்ய்ய்ய காதுகள், உலக நடப்பை உன்னிப்பாக இழுத்துக் கொள்ளும் உச்சந்தலை ஆண்டெனா மற்றும் மற்றஅந்தப் பொக்கை வாய் புன்சிரிப்பு எதுவுமே மாறவில்லை தாத்தா.

ஐ லவ் யூ ஸோமச் விகடன்தாத்தா.ஐலவ் யூ லவ் யூ லவ் யூ.

-நீலவேணி தேவராஜன்

விகடன் இதழுடன் உங்களுக்கு இருக்கும் பந்தம் குறித்து எழுத ஓர் அரிய வாய்ப்பு!

ஏறக்குறைய 100 ஆண்டுகளாக, தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு நீங்காத அங்கமாக விகடன் திகழ்ந்து வருகிறது. பொழுதுபோக்கு, அரசியல், சமூகச் செய்திகள் எனப் பல தளங்களில் விகடன் வாசகர்களின் எண்ணங்களை வளப்படுத்தி வருகிறது. உங்கள் நினைவுகளிலும், வாழ்க்கைப் பயணத்திலும் விகடனின் பங்கு என்ன? விகடன் இதழ் உங்கள் குடும்பத்தில் ஒருவராய்ப் பார்க்கப்பட்ட தருணங்கள் உண்டா? ஒரு செய்தியோ, ஒரு கட்டுரையோ, ஒரு புகைப்படமோ உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இப்படியான உங்கள் அனுபவங்களை "விகடனும் நானும்" என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதி அனுப்பலாம். கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • கட்டுரையின் நீளம் 500 முதல் 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

  • உங்கள் கட்டுரைகளை my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

தித்திக்கும் சென்னை... என் கனவு, என் வாழ்க்கை! | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

"இயற்கைக்கும் பேராசைக்கும் இடையிலான போராட்டம்" - டெல்லி வேள்பாரி வெற்றிவிழாவில் எம்.பி-கள் பங்கேற்பு

தலைநகர் டெல்லியில் ‘வீரயுக நாயகன் வேள்பாரியின் வெற்றி விழா கூடுகை’ சிறப்பாக நடந்தேறியது.ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையில் சாதித்த ‘வீரயுக நாயகன் வேள்பாரியின் வெற்றி விழா’ சென்னையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

``என் இதயத்தின் அறக்கடவுள்!'' - கபிலர் வழியில் ஒரு முனைவர்பட்ட மாணவி | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாரி மீது பித்து! - என் இதயத்தின் வீரயுக நாயகன் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பள்ளியில் அறியாத பாரியை, 'வேள்பாரி'யில் கண்டேன்! - மனதை மாற்றிய ஒரு நாவல் | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அரச மரத்தடி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க