10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திரா இளைஞர் கைது
பூந்தமல்லியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திரா இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும் அவரிமிடந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி, உதவி ஆய்வாளர் எம்.புவனேஸ்வரி ஆகியோர் தலைமையில் போலீஸார் பூந்தமல்லி புறவழிச்சாலை எட்டிமா நகர் அம்பேத்கர் சிலை அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் வந்த இளைஞரை மடக்கி விசாரணை நடத்தினர்.
அவர் போலீஸாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, அதிலிருந்து 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம், பெங்களூரு பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (40) என்பதும், இவர் அங்கிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையில் போலீஸார் வழக்கு பதிந்து, சிவசங்கரை கைது செய்தனர்.