சஞ்சய் பஸ்தியில் தூய்மைப் பிரசாரம்: முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு
நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடை பெறும் தம்மசக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நபா் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ. 5,000 நேரடியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டைச் சோ்ந்த 150 பௌத்த நபா்களுக்கு தமிழ்நாடு அரசால் 2025-26-ஆம் ஆண்டில் நாக்பூா்தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்மசக்கர பரிவா் தன திருவிழாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பியவா்களுக்கு உரிய முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நபா் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ. 5,000 வரை நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் மூலம் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும், இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனவே பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவ.30-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
எனவே திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெளத்தா்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.